202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இணுவில் வாள்வெட்டு! – ஆவா குழு தலைவன் கைது

Share

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே வினோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் வைத்து , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் யாழ், போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் , ‘தன் மீது ஆவா வினோதன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடாத்தினார்கள்’ என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தான்.

அதன் அடிப்படையிலையே வினோதன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...