இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மும்மத தலைவர்களின் சிறைப்பிடிப்புக்கு கண்டனம்

rtjy 241 scaled
Share

மட்டக்களப்பு மும்மத தலைவர்களின் சிறைப்பிடிப்புக்கு கண்டனம்

மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக் காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த (23.08.2023) திகதியன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பெளத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட பொலிஸாரும் வந்து ,நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர்.

இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல.

தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது. காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா?

இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றோம் என்றுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...