“புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்” என்ற தொனிப் பொருளின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடுகளின் (JUICE 2022) வரிசையில் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகினால் நடாத்தப்படும் மூன்றாவது சர்வதேச சித்த மருத்துவ ஆய்வு மாநாடு இன்று (27), வியாழக்கிழமை காலை கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகில் ஆரம்பமாகியது.
இன்று காலை ஆரம்பமாகிய மாநாட்டுக்கு முன்னரான பயிற்சிப் பட்டறை சித்த வைத்திய அலகின் தலைவர், சித்த வைத்தியர் திருமதி தயாளினி திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி மருத்துவர் எஸ். ராஜ்குமார், கைதடி சித்த போதனா வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி சித்த மருத்துவர் ஐ. ஜெபநாமகணேசன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள், சித்த வைத்திய அலகின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
“சித்த மருத்துவத்தின் ஊடாக ஆரோக்கியமான வாழ்வுக்கான நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தல்” என்ற தலைப்பிலான சர்வதேச சித்த வைத்திய ஆய்வு மாநாடு எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகள் இடம்பெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment