thumbnail 3
இலங்கைசெய்திகள்

உலர் வலய விவசாயத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாட்டை 2015ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடாத்தி வருகிறது. அந்த வரிசையில், அதன் எட்டாவது மாநாடு கடந்த புதன்கிழமை விவசாய பீடாதிபதி கலாநிதி எஸ். வசந்தரூபா தலைமையில் இடம்பெற்றது.
“உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக வளர்ந்து வரும் பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்கள்” (“Emerging Appropriate Agro-technologies Towards Food Sustainability”) என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஜப்பான் கய்சு பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் ஒகடா கைசு ஜப்பானில் இருந்து வருகை தந்து பிரதான பேச்சாளராக் கலந்து கொண்டு, “ஜப்பானின் ஸ்மார்ட் விவசாயம் : ஒரு பார்வையும் அதன் போக்கும” (Smart Agriculture’ in Japan: An Overview of the Trend) எனும் தலைப்பில் முதன்மைப் பேருரையாற்றினார்.
இவ்வாய்வு மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விவசாய உயிரியல், விலங்கு விஞ்ஞானம், மண், சூழல் மற்றும் பொறியியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், நீர், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப் பொருள்களில் 48 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...