” இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளார். இது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். 6 யோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.
இதற்கு ஜனாதிபதி உடனடி பதிலை வழங்கவில்லை. இதனால் மகாநாயக்க தேரர்களும், மகா சங்கத்தினரும் கூட்டு சங்கப் பிரகடனமொன்றை வெளியிட தீர்மானித்தனர்.
இந்நிலையில் மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில்தான் மேற்படி உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
#SriLankaNews
Leave a comment