ranil wickremesinghe at parliament
இலங்கைசெய்திகள்

இந்து மதத்தின் தனித்துவத்தை ஆராய ஆய்வு நிறுவனம்

Share

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (29) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

´இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இந்துக்கள் மட்டுமன்றி பௌத்த விகாரைகளிலும் இந்துமதத்தின் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது. தெற்கில் விஸ்ணு கடவுளை வழிபடுகின்றனர். ஏராளமான இந்து தெய்வங்களை தெற்கில் வழிபடுகின்றனர். விஸ்ணு, கந்தன், பத்தினி உள்ளிட்ட பல தெய்வங்களை வழிபடுகின்றனர்.

இந்தியாவில் உள்ள இந்து மதத்தைவிட இலங்கையில் உள்ள இந்து மதத்தின் தனித்துவம் குறித்து ஒரு அறிக்கையை தொகுக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய கட்சிகள் இதற்கு உதவ முடியும். வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம். இது நாம் செய்ய வேண்டிய ஒன்று. அதேபோல், இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.

நாம் வரலாற்றை மறந்துவிடுகிறோம். எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகாவம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

மகாவம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகாவம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறு கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும்.´ – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...