சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

24 66611df4e3223

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் 75 வீதமானவர்கள் பெண்கள் ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணிகளில் பெண்கள் குறைவாகவே உள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன (Eran Wickremaratne) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூல விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் எழுபத்தைந்து வீதமான மாணவர்கள் பெண்கள் ஆனால் முழு நாட்டிலும் இரண்டு அல்லது மூன்று பெண் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மட்டுமே உள்ளனர் என்று எரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறெனில் அணுகுமுறையில் சிக்கல் இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது என்று விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் 1979இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

ஆனால் அது இலங்கையில் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்றும் எரான் விக்ரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version