rtjy 178 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியா முட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்

Share

இந்தியா முட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் இதுவரை முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தலைவர் வலிசுந்தர கருத்து தெரிவித்துள்ளார்.

” இந்தியாவில் உள்ள மூன்று அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் பின் இலங்கைக்கு இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கையில் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னரே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர சுட்டிக்காட்டினார்.

இந்திய முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...