வீடு ஒன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல் ஒன்றால், குறித்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயை வைத்து விட்டு அங்கிருந்தது தப்பிச்சென்றுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறித்த வீட்டுக்கு வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று அத்துமீறி வீட்டினுள் நுழைந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளது.
அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் காருக்கும் தீ வைத்துள்ளதுடன், காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.
குறித்த தீயில், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் காரும் தீயால் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment