இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை: அமித்ஷா பகிரங்க சாடல்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை: அமித்ஷா பகிரங்க சாடல்

Share

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை: அமித்ஷா பகிரங்க சாடல்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வு கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது எனவும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதில் அமித்ஷா பயன்படுத்திய வார்த்தை நேரடியாக இனப்படுகொலை என்ற அர்த்தத்தை தருகிறதா என நோக்கும் போது “நரசங்கார” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும், அதன் முதல் நிலை அர்த்தம் பாரிய மனிதப் படுகொலை என்றும் அதனை இனப்படுகொலை என்று குறிப்பிட முடியும் என்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அமைச்சரின் உத்தியோகபூர்வ ருவிட்டரில் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சர் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளமை சிங்களத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டியதை வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸும் திமுகவும் காரணம் என்று பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்கின்றது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அமித்ஷா இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தின் ஒரு பகுதியே அதுவென்று குறிப்பிடுகின்றனர்.

1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் திகதி திருமதி இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார்.

1983 ஜூலைப் படுகொலைகளை எதிர்த்து ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றினார் ”இலங்கைத் தீவில் நடப்பது என்ன?அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை”. ஒரு இந்திய தலைவர் அவ்வாறு குறிப்பிட்டமை அதுதான் முதல் தடவை.

அதற்குப் பின் எந்த ஒரு இந்தியத் தலைவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. இந்திரா காந்தி அவ்வாறு கூறிச் சரியாக 40 ஆண்டுகளின் பின் இந்திய உள்துறை அமைச்சர் இப்பொழுது அதை இனப்படுகொலை என்ற பொருள்பட வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....