திருகோணமலை மாவட்டம் இந்தியாவின் பிரகடனப்படுத்தப்படாத ஒரு மாநிலமாக மாறி உள்ளதாகவும் அதற்கு அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு என்றும் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருகோணமலையை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா வடக்கையும் கொழும்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாலைதீவு விவகாரத்தில் சீனா தனது வலுவான இடத்தைக் கைப்பற்றி உள்ளமை இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்றும் அதற்கு பதிலாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.