இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் விஜயமாக நேற்று மாலை இலங்கைக்கு வந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், இலங்கையின் வெளியுறவு செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.
Leave a comment