இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, காமினி லொக்குகே உள்ளிட்ட இலங்கை குழுவினர், இந்திய வெளிவிவகார அமைச்சரவை வரவேற்றனர்.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், தமிழக் கட்சிகளையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள கலாச்சார நிலையத்தையும் காணொளி தொழில்நுட்பம் மூலம் திறந்து வைப்பார் என தெரியவருகின்றது.
#SriLankaNews
Leave a comment