14 24
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்றையதினம் (12) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி (Kilinochi) மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்பபடுத்தினர்.

இதன்போது குறித்த எட்டு இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(M. K . Stalin) கடிதம் எழுதியுள்ளார்.

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்தே மு.க ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் கடற்றொழில் மேற்கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதாக இன்று(12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களையும் அவர்களது கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.

இலங்கை கடற்படையினரால் கடற்றொழிலாளர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, கடற்றொழிலாளர் சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்”என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது! களு, களனி கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய முன் எச்சரிக்கை...

image 3166dced36
செய்திகள்இலங்கை

அரச இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பின.

‘இலங்கை அரச கிளவுட்’ (Sri Lanka Government Cloud) சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது...

skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...

25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...