16 10
இலங்கைசெய்திகள்

தேசிய கராத்தே போட்டியில் சாதித்த மன்னார் கராத்தே மாணவர்கள்

Share

தேசிய கராத்தே போட்டியில் சாதித்த மன்னார் கராத்தே மாணவர்கள்

மன்னார் (mannar)விடத்தல்தீவை சேர்ந்த அ. அமல்ராஜ் ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மன்னார் மடு கல்வி வலய அடம்பன் மத்திய மகாவித்தியாலய 13 வயது மாணவி செல்வி மகேந்திரன் சேருயா கடந்த 04/12/2024 அன்று கொழும்பு (colombo)சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற (குமித்தே) கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தினை வென்று மாவட்டத்திற்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

18 வயது கீழ் பிரிவில் தேசிய கராத்தே போட்டியில் இதுவே மன்னார் மாவட்ட வரலாற்றில் முதல் தடவை என்பதும் மாணவியும் ஆசிரியரும் மாவட்ட ரீதியில் பாராட்டு பெற்று வருகின்றனர்

அத்துடன் கடந்த 08/12/2024 அன்று கிளிநொச்சி(kilinochchi) உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மன்னார் மாவட்ட கராத்தே போட்டியில் 18 மாணவர்கள் போட்டியிட்டனர் இதில் 32 தங்கப்பதக்கம் 09 வெள்ளிப்பதக்கம் 03 வெண்கலப்பதக்கம் என 44 பதக்கங்களை பெற்றிருந்தனர்.

இதில் விடத்தல் தீவு, அடம்பன், நானாட்டான், வங்காலை, மன்னார், கற்கிடந்தகுளம் , முருங்கன் ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு 05 மாணவர்கள் இதில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

. அமல்ராஜ் இவோன் மன்/தூய ஜோசவாஸ் மகாவித்தியாலயம்

. p.றஜீபன் சென் ஆன்ஸ் வங்காலை

. N.நிதுனா சென் ஜோசப் விளையாட்டுகழகம் கற்கிடந்தகுளம்

J.ஜெசின் சென் ஜோசப் விளையாட்டு கழகம் . கற்கிடந்தகுளம்

S.முகேஸ் மன்/ சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி அமல்ராஜ் இவோன் ஸ்ரேயா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மாவட்ட ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இதில் போட்டியிட்ட 18 வீரர்களும் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். என்பதோடு அமல்ராஜ் றொமாரியோ பில் பிராங்கி குமித்தே(gold 01) குரும் காட்டா(gold) தனிக்காட்டா சில்வர் ஆகியன பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...