இந்திய மீனவர்கள் கைது!

1679589309 12 2

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத் தாக்கலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் 12 மீனவர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

#SriLankaNews

Exit mobile version