இந்திய உர விநியோகம் ஆரம்பம்!

viber image 2022 07 11 15 34 36 455

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட யூரியா உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

556 விவசாய மத்திய நிலையங்களுக்கு 800 லொறிகள் மூலம் உர விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கு தேவையான டீசல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
44 ,000 மெட்ரிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் நேற்றுமுன்தினம் நாட்டை வந்தடைந்தது.

மேலும் 21,000 மெட்ரிக் தொன் யூரியாவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version