2 38
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு!

Share

இந்திய சுரங்க மற்றும் கனிமத்துறை அமைச்சகத்தின் குழு ஒன்று, இலங்கையில் கனிமத் தளங்களுக்கு அண்மையில் விஜயம் செய்துள்ளது.

அத்துடன், இலங்கையின் முக்கிய கனிமத் தளங்களுக்குச் சென்று உயர் அதிகாரிகளையும் சந்தித்துள்ளது.

கனிமத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் குழு, தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியையும் சந்தித்துள்ளது.

இந்தப் பயணத்தின் நோக்கம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதும், மேம்பட்ட சுரங்க தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சதீஸ் சந்திர துபே, இந்தக்குழுவுக்கு தலைமையேற்றிருந்தார்.

இலங்கை அரசின் முதலீட்டு சபையின் தரவுகளின்படி, இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை நகரமான புல்மோட்டை மற்றும் வடமேற்கு கடற்கரை நகரமான புத்தளம் ஆகிய இரண்டிலும் 7.5 மில்லியன் மெட்ரிக் தொன், இல்மனைட்ஃரூட்டைல்ஃசிர்கான் வைப்புத்தொகைகள், 45,000 மெற்றிக்தொன் கிராஃபைட் மற்றும் 60 மில்லியன் மெற்றிக்தொன் அபாடைட் ஆகியவை உள்ளன.

அத்துடன், இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கனிம மணல் படிவில் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனாசைட், கார்னெட், சில்லிமனைட் மற்றும் பிற கனரக கனிமங்கள் இருப்பதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தரவு காட்டுகிறது.

முன்னதாக, கடந்த சுரங்கத்துறையில் முதலீடு செய்யவென சுமார் 10 வெளிநாட்டு நிறுவனங்களை வரவழைத்தது. எனினும் செயல்முறையை இறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கையை பொறுத்தவரையில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்கிறது.

இதன்மூலம், 2024 இல் சுமார் 25 மில்லியன் டொலர் சம்பாத்தியம் கிடைத்தது. எனினும், இது, 2022 இல் ஏற்றுமதி செய்யப்பட்டதில் பாதிக்கும் குறைவானது என்று மத்திய வங்கி தரவு காட்டுகிறது.

Share
தொடர்புடையது
25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு...

25 68f59693a092d
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக...

6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...