ஜனவரியில் பொருளாதார உதவிகள் குறித்து இந்தியா அறிவிக்கும்

IMG 0005.jpg

எதிர்வரும் ஜனவரி மாதமே இலங்கைக்கான பொருளாதார நிவாரணப் பொதி குறித்து இந்தியா அரசு அறிவிக்கும் என பசில் ராஜபக்சவிடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பொருளாதார உதவித் தொகுப்பு வெளிநாட்டு நாயணக் கையிருப்பை வலுப்படுத்துதல், உணவு மற்றும் மருந்து வழங்கல்,

எரிசக்தி துறையை மேம்படுத்துதல் மற்றும் முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் என்றும் இந்திய அமைச்சர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முன்மொழிவுகளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட ஆகியோர் இந்திய அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர்.

#SrilankaNews

 

#SriLankaNews

 

 

Exit mobile version