9 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு!

Share

இந்திய இராஜதந்திர நகர்வுகளில் இம்முறையும் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய நிர்மலா சீத்தாராமன் இந்த விடயத்தை முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, இலங்கைக்கான உதவியில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய வரவு செலவு திட்டதில் முந்தையதைப் போலவே 300 கோடி இந்திய ரூபா இலங்கையுடனான பொருளாதார நட்புறவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமையை இங்கு அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்மையும் தமது நாடு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...