11 20
இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி

Share

பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி

இலங்கையில் பெருந்தோட்டப் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான மானிய உதவியை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜெயசுந்தர ஆகியோர் இது தொடர்பான இராஜதந்திர கடிதங்களில் அண்மையில் கொழும்பில் வைத்து  கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்படி, பெருந்தோட்டப் பிரதேசங்களில் 9 பாடசாலைகள் இந்திய அரசாங்கத்தின் மானிய ஆதரவை பெறவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் நிதியுடன், திட்டத்திற்கான மொத்த அர்ப்பணிப்பு இப்போது 600 மில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த திட்டத்தின் ஊடாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பாடசாலையும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...