காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
இந்த நாட்களில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் இந்த வாரத்திற்குள் மாத்திரம் 1,700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment