செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா- பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் நிலை!

unnamed 1
Share

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக  லேடி
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்
பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம் என்றும் குழந்தைகள் மத்தியில் கொரேனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பாடசாலைகள் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரித்தால்,பயணத்தடைகள் மீள அமுலுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் வீட்டிலும் வெளியிலும் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் , குழந்தைகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...