அதிகரிக்கப்பட்டது எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு

HelloTech qr code 1024x1024 1

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக முன்பே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

ஓட்டோவுக்கான ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 8 லீட்டர்

மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கீடு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றர்

பஸ்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றர்

கார்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றர்

கனரக வாகனங்களுக்கான ஒதுக்கீடு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும்​

​லொறிகளுக்கான ஒதுக்கீடு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றராகவும்

சிறப்பு நோக்கங்களுக்கான வாகனங்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்

வான்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version