sri lanka tourism begins destination brand recovery process 2019 05 01 1000x600 1
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Share

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் நாட்டுக்கு 30,207 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் 32, 865ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, முதல் அரையாண்டில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவிலிருந்து 6,650 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,199 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,448 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...