கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை, தற்பொழுது 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபா வரை அதிகரித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment