இலங்கைசெய்திகள்

புத்தாண்டு காலத்தில் குறைவடைந்த கேக்கிற்கான தேவை

24 6618dc3945576
Share

புத்தாண்டு காலத்தில் குறைவடைந்த கேக்கிற்கான தேவை

நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கேக் துண்டு ஒன்றின் விலையும் 40 முதல் 60 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆனால், பல்பொருள் அங்காடிகளில் இந்த இனிப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இனிப்பு வகைகளின் விலை உயர்வு காரணமாக இனிப்புகளுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கேக் விலை உயர்வால் கேக்கிற்கான தேவையும் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ பட்டர் கேக் 1500 முதல் 1800 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மாஜரீன் போன்றவற்றின் விலை உயர்வால் கேக் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...