Bandula Gunawardane
இலங்கைசெய்திகள்

வரி தொடர்பில் பந்துல கருத்து!!

Share

மாதாந்தம் ரூ. 200,000 சம்பளம் பெறும் ஊழியர் ஒருவர் சம்பாதிக்கும் போது  அறவிடப்படும் வரியாக இனி ரூ.7,500 செலுத்த வேண்டும். தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகுறைப்பிலிருந்து ரூ.5,800 மீதப்படும். எனவே அவர் அல்லது அவள் 1,700 ரூபாய் மாத்திரமே செலுத்த வேண்டியிருக்கும் என  ஊடகவியலாளர் சந்திப்பின் போது  வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2001 தொடக்கம் 2007 வரையிலான இலங்கையின் வர்த்தக இடைவெளியானது 25.5 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன், அரசாங்கத்தின் டொலர் மற்றும் ரூபாயை மேம்படுத்துவதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இதை நிர்வகிக்க கூடியவாறு குறைக்க IMF விரும்புகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பாதிக்கும்  போது அறவிடப்படும் வரி உயர்வு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலக்களித்தலின் மூலம் அரச வருவாயை தற்போதுள்ள 8% இலிருந்து 20 வீதமாக உயர்த்துவதே நோக்கமாகும். அந்தப் பொருளாதார மேம்பாட்டின் நன்மைகள் பொது ஊழியர்களை சென்றடையும்.

வரி உயர்வின் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலக்களிப்பதன் மூலம் அரச வருவாயை உயர்த்தும் IMF இன் திட்டத்திற்கு இலங்கை உடன்பட்டுள்ளது. எனவே 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் , விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற இவ்வாறான சீர்திருத்தங்களை செய்ய அரசாங்கம் முனைகின்றது.

இலங்கை உடன்படிக்கையை மதிக்கத் தவறினால், விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் 2 ஆவது வாய்ப்பு எமக்குக் கிடைக்காது. எவ்வாறாயினும் பொருளாதார மேம்பாட்டின் முதல் நிகழ்வாக அரசாங்கம் தற்போதைய வரி வீத்ததைக் குறைக்கவே முயல்கிறது.

உலக சந்தையில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலை குறைப்பின் பலனைக் கடத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது , பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பால் வாழ்க்கைச் செலவு குறைந்து மேலும் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பங்களிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...