யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலை இன்று காலை அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் மாநகர சபையால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணணால் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து யாழ் மாநகர சபையால் உருவாக்கப்பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ சிலையினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமிடியசினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென் கையிலை ஆதின குரு முதல்வர் தவத்திரு அகத்தியார் அடிகளார், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ,அகில இலங்கை சைவ மகாசபை தலைவர் நா.சண்முகரத்தினம், பொதுச்செயலாளர் பரா நந்தகுமார், பொருளாளர் அருள் சிவானந்தன்,தமிழ்ச்சைவப்பேரவை பொதுச் செயலர் மருத்துவர் சுதர்சன்,மாநகர சபை உறுப்பினர்கள்,சிவதொண்டர்கள், சிவமங்கையர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment