12 20
இலங்கைசெய்திகள்

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி

Share

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி

அனைத்து நாடுகளுடனும் மற்றும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை (23.09.2024) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தலை நடத்துவதும், ஜனாதிபதியை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல. எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன். சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன்.

அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...