IMG 20220801 WA0011
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர் காரியாலயம் திறப்பு

Share

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறைத்த அதிபர் காரிய ஆலயத்திற்கான கட்டடம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

காரியாலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வலய உதவிக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதிபருக்கான காரியாலயம் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர் ஆர்.செந்தில்நாதன் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதில் தமிழர் தரப்பிற்கான தீர்வினை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்றும் குறித்த அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற வேளையிலே தமிழர்களின் பிரச்சினை தொடர்பிலே பேசப்பட்டு அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன் கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தமிழினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன் என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மேலும் சிங்களத் தரப்புக்களிடமிருந்து நாம் ஏமாறியதைக் காட்டிலும் தமிழ் தரப்பினரிடமிருந்து ஏமாந்தமையே அதிகமாக உள்ளது என்றும் இதன்போது தெரிவித்தார்.

IMG 20220801 WA0010

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...