” சிங்கங்கள் இருக்கும் காட்டில், கர்ஜிக்கும் சத்தம் பலமாகவே கேட்டும். அதனை சண்டையாக கருதிவிட முடியாது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது பொன்சேகாவுக்கும், ஹரினுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இவ் விவகாரம் குறித்து இன்றைய கட்சி கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மேற்படி முறுகல் நிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் இவ்வாறு குறிப்பிட்டார்.
” என்ன, சண்டையா? நானும், அவரும் சிங்கங்கள். சிங்கங்கள் இருக்கும் காட்டில் சண்டையும் இருக்கவே செய்யும். இது புரியாமல் நரிகள் ஊளையிடுவதால் நாம் என்ன செய்வது” – என கூறிவிட்டு பறந்தார் ஹரின் பெர்ணான்டோ.
#SriLankaNews
Leave a comment