Lotus Tower
இலங்கைசெய்திகள்

அதிர வைக்கும் தாமரைக் கோபுர செலவீனம்!

Share

கொழும்பு, தாமரைக் கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் அடிப்படையில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இந்த தகவல்களை பெற்றுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்கள், தாமரை கோபுரத்தின் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குரிய மொத்த செலவை உள்ளடக்கியுள்ளது.

அந்த தகவல்களுக்கமைய, 113,600,000 அமெரிக்க டொலர் கட்டுமான செலவினங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலோசனைக் கட்டணமாக 33 கோடியே 74 இலட்சத்து 85 ஆயிரத்து 20 ரூபாவும், கடன் உறுதி மற்றும் நிர்வாகக் கட்டணங்களுக்காக 22 கோடியே 23 இலட்சத்து 69 ஆயிரத்து 357 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குதல் ஆகிய செலவினங்கள் உள்ளடங்களாக இதர செலவுகளுக்காக மொத்தம் 34 கோடியே 42 இலட்சத்து 15 ஆயிரத்து 750 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிலத்திற்கான கட்டணமாக 2 பில்லியன் 250 மில்லியன் ரூபாவும் காப்பீட்டுக் கட்டணமாக 8,665,612 அமெரிக்க டொலரும் செலுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...