ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது என கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின்போதே இந்த மாற்றங்கள் வரவுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியாக மேற்கொண்ட தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு, தற்போது கட்சியில் முக்கிய பதவிகளில் வகிப்பவர்களை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படவுள்ளன.
அத்துடன், மொட்டு கட்சியில் முக்கிய பதவியொன்று நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது. தலைமைப்பதவியில் மஹிந்த ராஜபக்ச தொடர்வார்.
#SriLankaNews
Leave a comment