அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறித்த முக்கிய தீர்மானம் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் உயர்த்தப்பட வேண்டுமென சீமெந்த விநியோகஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், சீமெந்தின் விலையை 100 ரூபாவினால் உயர்த்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் உயர்வடையலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.