Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Share

எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இதன்படி, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது என்றும் சகல எரிபொருள் வகைகளுக்குமான விலைகள் அவ்வாறே பேணப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் 450 ரூபா, ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 540 ரூபா, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 430 ரூபா, சுப்பர் டீசலின் விலை 510 ரூபா என்றடிப்படையில், விலைகள் தொடர்ந்து பேணப்படும்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிகவும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. WTI தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 தசம் 42 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.அத்துடன், Brent தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 தசம் 91 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...