லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் வினியோகம் வழமைபோன்று இடம்பெறும் என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளின் நிமித்தம் காரணமாக தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமையாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாயுக்களால் வெளிப்படும் துர்நாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘மெர்காப்டன்’ என்ற இரசாயனக் கலவை போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு எரிவாயு சிலிண்டரில் 14 யூனிட் இரசாயனக் கலவை இருக்க வேண்டும் என்றாலும் தற்போது 5 யூனிட்களே உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment