வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் புதிய வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திய பயணிகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும், அவர்களிடம் எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இருந்தால் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வெளிநாட்டில் இருந்து வரும் தடுப்பூசி போடப்படாத நபர்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட முன்னைய வழிகாட்டுதல்களில் சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment