இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும் தருணத்தில் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமானத்தைப் பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும்.
ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளான இலங்கைப் பெண்ணின் உறவினர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான பரிசோதனை அறிக்கை எதிர்வரும் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment