இலங்கை வருவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் கொவிட் பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதிற்குக் குறைவான சிறுவர்களுக்கு முன்னெடுக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன் பரிசோதிக்கப்பட்ட பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SrilankaNews