Childrens
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

12 – 15 வயது சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு!

Share

12 வயது தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் முதல் குறித்த வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு சுகாதாரப் பிரிவினால் ஒரு டோஸ் தடுப்பூசி மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதுடன் இணைந்ததாக, பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத பாடசாலை ஆசிரியர்களுக்கும் அந்தந்த இடங்களில் தடுப்பூசியைப் பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் இதில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற முடியும்.

மேலும் வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலைகள் வழமைபோன்று செயற்படும், அத்துடன் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாகவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...