இறக்குமதியான 500 அரிசி கொள்கலன்கள் நேற்று(13) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் தரப்பினரால் அரிசி கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரி நிவாரணத்திற்கு ஏற்ப, இறக்குமதியான இந்த அரிசி தொகையைச் சந்தைக்கு விநியோகித்த பின்னர் அரிசியின் விலை குறைவடையும் என்றும் அமைச்சர் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
தற்போது அரிசி மோசடி இடம்பெறுகிறது. செயற்கை விலை உயர்வைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி 105 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட மாட்டாது என தாம் வாக்குறுதி வழங்குவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்ன தெரிவித்துள்ளார்.
சம்பா ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment