பட்டத்துடன் வானில் பறந்த இளைஞனுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

Pattam

யாழ்ப்பாணத்தில் பட்டத்துடன் இளைஞர் ஒருவர் 120 அடிக்கும் மேல் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.

தற்போது, பட்டத்துடன் பறந்த குறித்த இளைஞனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

120 அடிக்கும் மேல் உயர இழுத்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞன் முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிர்தப்பியிருந்த நிலையில், அப்போது அவரது, உடலில் அடிப்பட்டதாகவும், கூறப்படுகிறது.

இதன்காரணமாக முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இருப்பினும் முள்ளந்தண்டில் வலி இருப்பதாகவே குறித்த இளைஞன் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#SrilankaNews

Exit mobile version