ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலக கோரி நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக யாழ்ப்பாண நகரில் இன்றைய தினம் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதன் காரணமாக யாழ்ப்பாண குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக செயலிழந்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றது
பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்து ள்ளன அத்தோடு யாழ்ப்பாண நகரத்தின் வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதோடு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment