Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

IMF கடனால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை!

Share

” சர்வதேச நாணய நிதியம் என்ற கோவிலில் காணிக்கை கட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாமும் தீர்வை தேட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” நாம் தொடர்ச்சியாக பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. தீர்வு திட்டத்தை முன்வைக்கும் வகையிலேயே புதிய கூட்டணியை உருவாக்கின்றோம். அதன் அங்குராப்பண நிகழ்வு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் இணையுமாறு அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியம் ஒரு தொகை கடனை வழங்குவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா, அவ்வாறு தீர்ந்துவிடும் என நினைப்பவர்களும் உள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. நாமாக எழுந்து நிற்கும் தீர்வை தேட வேண்டும்.” – என்றார் விமல்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...