40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியெல்ல,
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதிகளைப் பெற்றால் நட்டத்தில் இயங்கும் நாற்பது அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஆதரவளிக்க முடியும்.
அரசாங்கத்தில் இணைந்தால் தான் அரசுக்கு உதவ வேண்டும் என்றில்லை. எதிர்கட்சியில் இருந்து கொண்டும் அரசுக்கு உதவி செய்ய முடியும். .இது தொடர்பில் நாம் பாராளுமன்றில் பேசி அரசுக்கு உதவி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

