ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இன்றிரவு சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் ஆதரவு வலுத்துவரும் நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அரசுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி நாளை கண்டியில் ஆரம்பமாகின்றது.
#SriLankaNews
Leave a comment