கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு!

KILINO

கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் , உடுப்பாற்றுக்கண்டல், மற்றும் உப்பாறு ஆகிய பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது என அங்குள்ள விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் பிரதேச செயலாளரின் முயற்சியால் ராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மருதங்குளம் உடுப்பாற்றுக்கண்டல் உப்பாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே இது  தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version