இலங்கை வாக்காளர்களில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. பெண்கள் இல்லாத அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மகளிர் விவகாரத்துக்கென ஒதுக்கப்படும் அமைச்சும் தொடர்ந்து இல்லாது செய்யப்பட்டுள்ளது.
கடந்த அமைச்சரவையில் பவித்ராதேவி வன்னியாராச்சி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் சீதா அரம்பேபொல, கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, மற்றும் டயானா கமகே ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சார்பாக செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews