ரம்புக்கனை போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
அத்துடன், அரசின் – அரச பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பாதகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாதெனவும், நாட்டையும், மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பினருக்கு இருக்கின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தி, நாட்டை ஆள முடியாவிட்டால், மாற்று தரப்பினரிடம் ஆட்சியை கையளிப்பதே மேலான செயல் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews